உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டு விழா

கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டு விழா

தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியம், குடியநல்லுார் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.நபார்டு திட்டத்தின் கீழ் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்திற்கு ரூ 36.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு துணை சேர்மன் நெடுஞ்செழியன் பி.டி.ஓ., க்கள் கொளஞ்சிவேல், செந்தில் முருகன், ஒன்றிய பொறியாளர் ராமர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய சேர்மன் தாமோதரன் அடிக்கல் நாட்டினார். முன்னாள் சேர்மன் தங்கராஜ், ஊராட்சி தலைவர் பாஞ்சாலை, துணைத் தலைவர் ஜாகிர், ஒன்றிய கவுன்சிலர் சண்முகம், பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை