உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விநாயகர் சிலை அமைப்பு: ஆலோசனை கூட்டம்

விநாயகர் சிலை அமைப்பு: ஆலோசனை கூட்டம்

திருக்கோவிலூர்: மணலூர்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருக்கோவிலூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட மணலூர்பேட்டை மற்றும் பகண்டை கூட்டு சாலை போலீஸ் ஸ்டேஷன் எல்லை கிராமங்களில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலை அமைப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மணலூர்பேட்டையில் நடந்தது. மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வரவேற்றார். பகண்டை கூட்டு சாலை சப் இன்ஸ்பெக்டர் சூர்யா முன்னிலை வகித்தார். திருக்கோவிலூர் வட்ட இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் பங்கேற்று சிலைகள் வைப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை சிலை அமைப்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என பேசினார். இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 30-க் கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்திருந்த சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை