உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கபடி போட்டியில் மாணவியர் முதலிடம்

கபடி போட்டியில் மாணவியர் முதலிடம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் நடந்த குறு மைய விளையாட்டுப் போட்டியில் ஜி.அரியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கபடி போட்டியில் முதலிடம் பெற்றனர்.ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இதில், கபடி போட்டியில் ஜி.அரியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, உடற்கல்வி ஆசிரியை உஷாராணி மற்றும் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் வெற்றி பெற்ற மாணவியர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி