மேலும் செய்திகள்
உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை முகாம்
11-Aug-2024
கள்ளக்குறிச்சி: உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடக்கிறது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டு கல்லுாரிக்கு விண்ணப்பிக்காத பிளஸ் 2 தேர்வெழுதிய, எழுதாத இடைநின்ற மற்றும் தேர்வெழுதிய தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கப்படுகிறது. அதன் மூலம் உயர்கல்வி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சியில் 100 சதவீதம் சேர்க்கையை உறுதி செய்யும் பொருட்டு உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.கள்ளக்குறிச்சி கோட்டத்தில் வரும் 9 மற்றும் 19 ம் தேதி இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி, திருக்கோவிலுார் கோட்டத்தில் வரும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, உளுந்துார்பேட்டையில் வரும் 23 ம் தேதி ஜவஹர்லால் நேரு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி என ஆகிய இடங்களில் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாவட்டத்தில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி பயிலும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
11-Aug-2024