உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

ஆர்.கே.எஸ்., பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். கல்லுாரி தாளாளர் குமார், துணைத்தலைவர் ரவிசங்கர், நிர்வாக அலுவலர் மோகனசுந்தர், பள்ளி தலைவர் மணிவண்ணன், துணைத்தலைவர் நளினி, செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தனர்.முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். ஆசிரியர் ராகில் ஜாயிஸ்மேரி ஆண்டறிக்கை வாசித்தார்.சிறப்பு அழைப்பாளர்கள் நடிகர் திருமலையழகன், தொடக்கப்பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி உரையாற்றினர். நடனம், நாடகம், சைகை மூலம் செய்தி தெரிவித்தல், மாறுவேடம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, தேர்வு மற்றும் விளையாட்டு போட்டிகளில், சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் ஜீசஸ்சுஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை