உள்ளூர் செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா

திருக்கோவிலுார்: அரும்பாக்கம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது.திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ