மேலும் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
16-Sep-2024
மூங்கில்துறைப்பட்டு, : வடபொன்பரப்பில் உள்ள பொன்முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பில் பொன்முத்து மாரியம்மன், கணபதி, பாலமுருகர், மகேஷ்வரி, வைஷ்ணவி, பிரம்மமுகி, மூப்பனார், லிங்கம், அம்பாள், நந்தி பலி பீடம், நவகிரஹங் கள் ஆகிய சுவாமிகளுக்கு கடந்த 13ந் தேதி காலை 8 மணிக்கு விக்னேஷ்வர் பூஜையுடன் ஆரம்பமானது.மாலை 5 மணிக்கு முதற்கால யாக பூஜையும், 14 ந் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு பூர்ணஹூதி மற்றும் தீபாராதனையும் நடந்தது.காலை 9.55 க்கு கடம் புறப்பட்டு அனைத்து சுவாமிகளின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினர். இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிப்பட்டனர். ஊராட்சி மன்ற தலைவர் சிவமலை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
16-Sep-2024