உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண் ஊராட்சி தலைவரிடம் தகராறு செய்தவர் கைது

பெண் ஊராட்சி தலைவரிடம் தகராறு செய்தவர் கைது

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பெண் ஊராட்சி மன்ற தலைவரிடம் தகராறில் ஈடுபட்ட, வார்டு உறுப்பினரின் கணவர் கைது செய்யப்பட்டார்.உளுந்துார்பேட்டை தாலுகா பு.கொணலவாடியை சேர்ந்தவர் தங்கதுரை மனைவி ஜெயக்கொடி,50; ஊராட்சி மன்ற தலைவர். இவர் குடிநீருக்காக 'போர்வெல்' அமைக்கும் பணியை மேற்கொண்டார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கொளஞ்சியின் கணவர் சக்திவேல், 47; அங்கு வந்தார். அவருடன் சகோதரர் குமார் மற்றும் ஆறுமுகம் மகன் கார்த்திக் ஆகியோர் 'போர்வெல்' பணி தொடர்பாக, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்கொடி மற்றும் அவரது மகன் ஜெயக்குமாரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதில் இருதரப்பினருக் கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து ஜெயக்கொடி, புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் சக்திவேல் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் குமார், கார்த்திக் ஆகியோரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை