மேலும் செய்திகள்
ரயிலில் அடிபட்டு பெண் பலி
24-Feb-2025
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே ரயில் பாதையில், கள்ளக்குறிச்சி நபர் தலை சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தார்.விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதை அருகே, ரயில் பாதையோரம் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், தலை சிதைந்த நிலையில் கிடந்தது. விருத்தாசலம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கள்ளக்குறிச்சி, கோட்டைமேடு மாரிமுத்து மகன் பாலசுப்ரமணியன், 41, என்பதும், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்ததும் தெரிந்தது. இவரது மனைவி ஜெயா அங்குள்ள ஆதிதிராவிட நலப்பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். மகன், மகள் உள்ளனர்.கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாலசுப்ரமணியன், நேற்று காலை ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. தற்கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Feb-2025