உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மேலாண்மைக்குழு கூட்டம்

மேலாண்மைக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி : வீரசோழபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் செல்லதுரை தலைமை தாங்கினார். வீரசோழபுரம் ஊராட்சி தலைவர் முருகவேல் முன்னிலை வகித்தார். சி.இ.ஓ., முருகன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம் மற்றும் அதன் பணிகள் குறித்து விளக்கினார்.கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் பத்மாவதி, சுகுணா, பள்ளி ஆசிரியர்கள் செந்தில்குமார், மணிமேகலை, பவுலேனாமேரி, இளையாழ்வார், ராதா, செல்வம், விஜயலட்சுமி, சாந்தி, சரண்யா ஆகியோர் பங்கேற்றனர்.ஆசிரியர் கிருபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை