உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், ரோட்டரி கிளப் சார்பில், காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.ரோட்டரி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி, காசநோயால் பாதிக்கப்பட்ட, 50 நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். மண்டல துணை ஆளுனர் ராமலிங்கம், செயலாளர் சிவக்குமார், முன்னாள் தலைவர் இமானுவேல் சசிகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட காசநோய் அலகு மருத்துவ அலுவலர் பொய்யாமொழி, வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் நோய் ஆரம்ப அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், பக்க விளைவுகள் மற்றும் உடல் பராமரிப்பு முறைகளை விளக்கினர். தொடர்ந்து, கொண்டக்கடலை, பாதாம், முந்திரி, உலர் திராட்சை, பச்சைப்பயிறு, நிலக்கடலை, சத்துமாவு, பொட்டுக்கடலை உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர். காச நோய் நலக்கல்வியாளர் ராஜூ, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன், சுகாதார ஆய்வாளர்கள் அரவிந்தன், பாலா, விக்னேஸ்வரன், அரவிந்த், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் கதிரேசன், ரோட்டரி உறுப்பினர்கள் முத்துசாமி, இளங்கோவன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !