உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி அரசு மகளிர் பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி அரசு மகளிர் பள்ளியில் தினமலர்-பட்டம் இதழ் வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பெங்களூரு குளோபல் பின்சர்வ் கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதேவி ஜெகந்நாதன், கள்ளக்குறிச்சி மையா பெண்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் குமார் ஆகியோர் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை கீதா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியைகள் சுமா, வசந்தா முன்னிலை வகித்தனர். பள்ளியின் பட்டம் இதழ் ஒருங்கிணைப்பாளரான ஆசிரியை தேவிமயில் வரவேற்றார். மையா பெண்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் குமார் மாணவிகளுக்கு பட்டம் இதழை வழங்கி, பட்டம் அறிவியல் இதழை தினமும் படிப்பதால், மாணவிகளிடையே நல்ல பண்பை வளர்வதுடன், சிறுவயதிலேயே சமுதாயத்தை எதிர்கொள்ளும் அறிவாற்றல் உருவாகும். கடந்த 7 ஆண்டுகளாக பட்டம் இதழை வழங்கி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து தலைமை ஆசிரியை கீதா, பட்டம் இதழ் படித்தால் அறிவியல் குறித்த அறிவு ஏற்படுவதால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிதாகிறது.எனவே தினமும் பட்டம் இதழிலிருந்து கேள்விகள் கேட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறோம் என தெரிவித்தார்.ஆசிரியைகள் காந்திமதி, சிவப்பிரியா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி