உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுவனுக்கு மடக்கு சக்கர நாற்காலி வழங்கல்

சிறுவனுக்கு மடக்கு சக்கர நாற்காலி வழங்கல்

கள்ளக்குறிச்சி : மல்லாபுரம் கிராமத்தில் மூளை முடக்குவாதம் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகன் அம்பேத்கர், 8; மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அரசின் உதவிகள் வேண்டுமென பெற்றோர்கள் கலெக்டருக்கு விண்ணப்பித்து இருந்தனர்.கலெக்டர் பிரசாந்த் உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் மூலம் சிறுவனின் இல்லத்திற்கு நேரில் சென்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அதனைத் தொடர்ந்து, சிறுவனுக்கு 6,500 ரூபாய் மதிப்பிலான சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.அத்துடன் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் பெற்றோர் சுயதொழில் புரிய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி