உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி ஸ்கூட்டர் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி ஸ்கூட்டர் வழங்கல்

கள்ளக்குறிச்சி; தண்டு வடம் பாதித்த, மாற்றுத்திறனாளிளுக்கு, ரூ.4.10 லட்சம் மதிப்பில், பேட்டரி ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிளுக்கு, பேட்டரி ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று, தலா ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, அதி நவீன பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்களை, 4 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.மொத்தம், 4 லட்சத்து 20 ரூபாய் மதிப்பில், ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை