மேலும் செய்திகள்
கண் பரிசோதனை முகாம்
22-Feb-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் பால தண்டா யுத பாணி தலைமை தாங் கினார். டாக்டர்கள் வந்தனாதேவி, கீதா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கலா பன் வரவேற்றார். பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், வட்டார கண் மருத்துவ உதவியாளர் ஷகிலா கண்களை பராமரிப்பது குறித்து விளக்கி, மாணவர்களுக்கு பரிசோதனை செய்தார்.முகாமில் கண்களில் குறைபாடுள்ள, 183 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.உதவி தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி, அேஷாக், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர் பிருந்தா நன்றி கூறினார்.
22-Feb-2025