கல்வராயன்மலையில் நலத்திட்ட உதவி வழங்கல்
கச்சிராயபாளையம்: கல்வராயன்மலை ஒன்றியத்தில் அனைத்து துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.கல்வராயன்மலை, கரியாலுார் கோடை விழா அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திக்கேயன், விழுப்புரம் மண்டல தலைமை வன பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர். பழங்குடியினர் நலத்துறை திட்ட இயக்குனர் சுந்தரம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் அமைச்சர் வேலு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.விழாவில், வனத்துறை, சமூகநலம், பழங்குடியினர் நலம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில் தையல் இயந்திரம், வன உரிமை சான்று, கறவை மாடுகள், சர்க்கர நாற்காலி, பவர் டிர்லர், அமுதசுரபி கடன் உட்பட 1,082 பயனாளிகளுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ஒன்றிய சேர்மன்கள் சந்திரன், சத்தியமூர்த்தி, துணைச் சேர்மன்கள் பாட்ஷாபீ ஜாஹிர்உசேன், அன்புமணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், சின்னதம்பி, பி.டி.ஓ., அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் அருண்ராஜா, ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.