உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இன்று பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக வட்ட வழங்கல் அலுவலர் சேகர் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்த செய்திக்குறிப்பு:சங்கராபுரம் வட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் இன்று காலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த முகாமில், மின்னணு ரேஷன் கார்டு தொடர்பான முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்க்கை, புதிய குடும்ப அட்டை உரிய ஆவணங்கள் அடிப்படையில், சரி பார்த்து வழங்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி