உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொடரும் பைக் திருட்டு பொது மக்கள் அச்சம்

தொடரும் பைக் திருட்டு பொது மக்கள் அச்சம்

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் தொடரும் பைக் திருட்டால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.சங்கராபுரம் பகுதியில் சில நாட்களாக வீடு மற்றும் கடையின் முன் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகள் திருடு போகிறது. 10 நாட்களில் மல்லாபுரம் குபேந்திரன், தாவடிப்பட்டு குமார், மஞ்சபுத்துார் தினேஷ்குமார், கடுவனுார் செல்வம், வடசெட்டியந்துார் சதிஷ் ஆகியோருக்கு சொந்த ஹீரோ ஹோண்டா பைக்குகள் திருடு போயுள்ளது.தொடரும் பைக் திருட்டால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். பைக் திருடர்களை பிடிக்க போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை