உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அருதங்குடியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ.77.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அருதங்குடியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: ரூ.77.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் பிரசாந்த் கலந்து கொண்டு 200 பேருக்கு, ரூ. 77.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.திருக்கோவிலுார் அடுத்த அருதங்குடி ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, முகாமில் பங்கேற்ற 200 பயனாளிகளுக்கு, ரூ. 77.04 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயம் மற்றும் கால்நடைகளை சார்ந்த மாவட்டமாகும். எனவே கூடுதலாக பால் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ஆசனுாரில் 1,190 ஏக்கரில் புதிய சிப்காட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் புதிய சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்காக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.அரசின் ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களை அந்தந்த துறை அலுவலர்களை அணுகி பொதுமக்கள் எளிதில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே மக்கள் தொடர்பு திட்ட முகாமின் நோக்கம் என கலெக்டர் பிரசாந்த் பேசினார். ஒன்றிய குழு சேர்மன் அஞ்சலாட்சி அரசகுமார், தாசில்தார் மாரியாப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஊராட்சி தலைவர் சரஸ்வதி மாதவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை