உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ பிரிவில் போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அசோக், 35; கடந்த 20ம் தேதி அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் மதியம் ஒரு மணி அளவில் எதிர் வீட்டில் இருந்த 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை சமையல் செய்ய தண்ணீர் எடுத்து வருமாறு கூறினார்.இதனை நம்பி சிறுமியும் தண்ணீர் எடுத்துச் சென்றார். அப்போது சிறுமியை அசோக் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ