உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன் மலையில் சாலை மறியல்

கல்வராயன் மலையில் சாலை மறியல்

கச்சிராயபாளையம்: சேராப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வராயன் மலை, சேராப்பட்டு கிராமத்தில், பஸ் நிலையம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் சிலர் ஆக்ரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் நீண்ட காலமாககடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த ஆக்ரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், நேற்று காலை 11:00 மணிக்கு பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மணிவண்ணன், கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய் துறை மூலம் அளவீடு செய்து, விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பகல் 2:00 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி