உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் மதுப்பழக்கம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியை கீதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் இன்ஸ்பெக்டர் ராபின்சன் பேசுகையில், 'மாணவிகள் பைக்கில் செல்லும் போது கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும். போக்குவரத்து சிக்னலை முறையாக பின்பற்றுவதுடன், வாகனம் ஓட்டும் போது மொபைல் பேசக் கூடாது. சாலையை கடக்கும் போது இருபுறமும் கவனிக்க வேண்டும். குடும்பத்தில் மது அருந்தும் நபர்கள் இருந்தால், அவர்களிடம் மதுப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ