உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரூ. 1.20 கோடியில் பேரூராட்சி கட்டடம் சங்கராபுரம் எம்.எல்.ஏ., பூமி பூஜை

ரூ. 1.20 கோடியில் பேரூராட்சி கட்டடம் சங்கராபுரம் எம்.எல்.ஏ., பூமி பூஜை

சங்கராபுரம்: சங்கராபுரம் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை நடந்தது. சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 1.20 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையொட்டி காட்டுவனஞ்சூர் கிராம எல்லையில் நேற்று காலை புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.பேரூராட்சித் தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை தலைமை தாங்கினார். துணை தலைவர் ஆஷாபீ, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய குழுத் தலைவர் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சங்கர் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளரான உதயசூரியன் எம்.எல்.ஏ., பூமிபூஜையை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்த்தனன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், கமருதீன், பழனி, ஷாகுல், முருகன், செங்குட்டுவன், ரமேஷ்குமார், பிரபாகர், கோவிந்தன், இதாயதுல்லா, கோவிந்தசாமி, தொழிலதிபர் கதிரவன், ஒப்பந்ததாரர் பாலமுருகன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ