மேலும் செய்திகள்
தேசிய யோகா போட்டியில் மாணவர்கள் சாதனை
28-Jul-2026
மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்
13-Jul-2026
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை கிளை நுாலகத்தில் மணற்கேணி செயலியை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மணலுார்பேட்டை கிளை நுாலகத்தில் போட்டித் தேர்வு எழுதுபவர்கள் படித்து பயனடைந்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக மணற்கேணி செயலி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நுாலக வளாகத்தில் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட மணற்கேணி செயலி அமலாக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்புமதி போட்டி தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு அதனை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில், பயிற்சி மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மணற்கேணி துாதுவர் அம்சவேணி, நுாலகர் அன்பழகன், நுாலக பணியாளர் பாஸ்கரன் உடனிருந்தனர்.
28-Jul-2026
13-Jul-2026