உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தேசிய கயிறு தாண்டுதல் சங் கரா புரம் மாணவர்கள் சாதனை

தேசிய கயிறு தாண்டுதல் சங் கரா புரம் மாணவர்கள் சாதனை

சங்கராபுரம்: மும்பையில் நடந்த தேசிய கயிறு தாண்டுதல் போட்டியில், சங்கராபுரம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.மகராஷ்டிரா மாநிலம், நாசிக்கில், 21வது தேசிய அளவிலான ஜம்ப்ரோப் ஜூனியர் மற்றும் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் குஜராத், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், டில்லி, அரியானா மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியர் பங்கேற்றனர். தமிழகம் சார்பில், 10 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தமிழக அணி, 9 தங்கம்,10 வெள்ளி, 2 வெண்கலம் உள்ளிட்ட மொத்தம், 21 பதக்கங்ளை குவித்தது.இதில் தமிழக அணியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவ மாணவிகள் 9 பேர் கலந்து கொண்டு பல்வேறு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்ளை வென்றனர். மேலும் ஜூனியர் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் தமிழக அணி இரண்டாமிடம் பிடித்தது.வெற்றி பெற்றவர்களை, தமிழக கயிறு தாண்டுதல் சங்க செயலாளர் சுகுமாறன், பயிற்சியாளர் சூரியமுர்த்தி, தேசிய நடுவர் முத்துக்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை