கள்ளத்தொடர்பு உறுதி எஸ்.ஐ., சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பில்லுாரைச் சேர்ந்தவர் அசோக், 28. இவரது மனைவி ரமணி, 32. இவரை கடந்த மாதம் 19ம் தேதி கணவர் அசோக் அடித்துக் கொலை செய்தார். எடைக்கல் போலீசார் அசோக்கை கைது செய்து விசாரித்தனர்.போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், திருநாவலுார் எஸ்.ஐ., நந்தகோபால் உள்ளிட்ட சிலரிடம் ரமணி கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனால், ரமணியை அடித்துக் கொலை செய்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக, நந்தகோபாலிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அதில், உண்மை இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து, நந்தகோபாலை நேற்று டி.ஐ.ஜி., திஷாமிட்டல், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். மேலும், மரக்காணம் தலைமை காவலர் பிரபாகரன், உளுந்துார்பேட்டையில் பணிபுரிந்தபோது, ரமணியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்ததால், அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.