உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாமியார் வீட்டிற்கு தீ வைப்பு: மருமகன் கைது

மாமியார் வீட்டிற்கு தீ வைப்பு: மருமகன் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகில் குடிபோதையில் மாமியார் வீட்டை கொளுத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த உலகலாப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நுார்ஜகான், 55; இவருடைய மூத்த மகள் யாஸ்மினியை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், ஷேக் ஜமால் மகன் ேஷக் அலி, 40; என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு இரு பிள்ளை உள்ளனர். ேஷக் அலி, திருமணத்திற்கு பிறகு, மாமியார் வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தினமும் குடித்து விட்டு மாமியார், தனது பிள்ளைகளிடமும், பிரச்னை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல, பிரச்னையில் ஈடுபட்டவர், தொடர்ந்து அவரது கூரை வீட்டை கொளுத்தி விட்டு சென்றார். இதில் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் நள்ளிரவு 2:00 மணி அளவில் தீயை அணைத்தனர். இதுகுறித்து நுார்ஜகான் கொடுத்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் ேஷக் அலியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !