விரைவில் விளையாட்டு அரங்கம்: அமைச்சர் உறுதி
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுாரில் விளையாட்டு அரங்கம் விரைவாக அமைக்கப்படும் என, அமைச்சர் தெரிவித்துள்ளார். திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லுார் அரசு மேல்நிலை பள்ளி அருகே காலியாக இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு அரங்கம் அமைக்க, 2 ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். ஆனாலும் அதற்கு பின், எந்த பணிகளும் துவங்கவில்லை.இந்நிலையில் அமைச்சர் மீண்டும் அந்த இடத்தை பார்வையிட்டார். அதிகாரிகளுடன் கலந்து பேசி, விரைவாக விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.