உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர் சேர்க்கை முகாம்

மாணவர் சேர்க்கை முகாம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த பூமாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் புஷ்பா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சுகந்தி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் முரளி கிருஷ்ணன், கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பள்ளி சேர்க்கை மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு மாலை அணிவித்து, வரவேற்று சேர்க்கையை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகாலட்சுமி மற்றும் உறுப்பினர்கள் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை நன்கொடையாக வழங்கினர். முதல் வகுப்பில், 17 மற்றும் மழலையர் வகுப்பில், 3; மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆசிரியர் பொற்செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !