மேலும் செய்திகள்
கிணற்றில் முதியவர் உடல் போலீசார் விசாரணை
25-Aug-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துாரை சேர்ந்தவர் குரு மனைவி கொளஞ்சி,55. இவர் அதே பகுதியை சேர்ந்த கருப்பன் என்பவரின் பாழடைந்த வீட்டில் நேற்று காலை மர்மான முறையில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த வி.ஏ.ஓ., முத்துராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது மகன் ரமேஷ் என்பவர், உயிரிழந்த தாய் கொளஞ்சியின் உடலை சொந்த வீட்டிற்கு எடுத்து சென்றார். சம்பவ இடத்தில் ரத்தக்கரையும், கொளஞ்சியின் உடலில் ரத்த காயங்களும் இருந்தது.கொளஞ்சி இறப்பு தொடர்பாக புகார் அளிக்க அவரது ரமேஷ் முன்வரவில்லை. இதையடுத்து கொளஞ்சியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வி.ஏ.ஓ., முத்துராஜ் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கொளஞ்சியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
25-Aug-2024