மேலும் செய்திகள்
வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் கைது
26-Aug-2024
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே வீட்டுமனை பிரச்னையால் வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.அரகண்டநல்லுார் அடுத்த தண்டரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தனுஷ், 23; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 54; இருவருக்குமிடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஆறுமுகம் மகன் ராஜிவ் காந்தி, 38; தனது ஆதரவாளர்கள் மூன்று பேருடன் தனுஷ் வீட்டிற்கு சென்று அவரை திட்டி, இரும்பு ராடால் தாக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த தனுஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜிவ் காந்தியை கைது செய்தனர்.
26-Aug-2024