உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சி.பி.ஐ., விசாரணையில்தான் உண்மை தெரியும்; அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் பேட்டி

சி.பி.ஐ., விசாரணையில்தான் உண்மை தெரியும்; அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் பேட்டி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கள்ளச்சாராய சாவுக்கு இங்குள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், மதுவிலக்கு துறை அமைச்சர் தான் காரணம். காவல் நிலையம் அருகே சாராய விற்பனை நடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. கலெக்டர் பேட்டியை பார்க்கும்போது, ஆளுங்கட்சியின் தலையீடு, அராஜகம் இப்பகுதியில் மிகவும் அதிகமாக இருப்பது தெரிகிறது. காவல்துறையை செயல்பட விடாமல் தடுத்து வைத்ததும் தி.மு.க.,வினர் தான். இச்சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்று, தமிழகத்தில் இனி கள்ளச்சாராய மரணங்கள் நிகழாமல் தடுத்து நிறுத்த வேண்டும். விசாரணை ஆணையம் கொடுக்கும் அறிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. சி.பி.ஐ., விசாரணை நடத்தினால்தான் இச்சம்பவத்தில் உண்மை தெரியவரும்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தவறான முன் உதாரணமாகும். இவ்வாறு தினகரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ