மார்க்கெட் கமிட்டிகளில் ரூ.45.50 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் ரூ. 45.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு, விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, மக்காச்சோளம் 320 மூட்டை, உளுந்து 200, எள் 25, மணிலா, கம்பு தலா 10மூட்டை, வரகு 4, தட்டைப்பயிர், தேங்காய் தலா ஒரு மூட்டை என 571 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,399 ரூபாய், உளுந்து 7,155,எள் 9,290, மணிலா 8,508, கம்பு 2,510, வரகு 2,073, தட்டைப்பயிர் 68,99,தேங்காய் 9,820 ரூபாய் என மொத்தம் 25 லட்சத்து 66 ஆயிரத்து 121 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 20, வரகு 15, உளுந்து, எள் தலா ஒரு மூட்டை என மொத்தம் 37 மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஒரு மூட்டை மக்காச்சோளம்2,344 ரூபாய், வரகு 2,189, உளுந்து 7,109, எள் 11,373 ரூபாய் என மொத்தம் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 446க்கு வர்த்தகம் நடந்தது.தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் நெல் 314 மூட்டை, உளுந்து 111, கம்பு40, மக்காச்சோளம் 12 என மொத்தம் 477 மூட்டை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.நெல் 2,185 ரூபாய், உளுந்து 7,400,கம்பு 2,509, மக்காச்சோளம் 2,299 ரூபாய் என மொத்தம் 16 லட்சத்து 69 ஆயிரத்து 632க்கு வர்த்தகம் நடந்தது.