உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல்

உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்று சென்றனர். இதனால் நேற்று மாலை முதல் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வாகனங்களில் அதிக அளவில் புறப்பட்டுச் சென்றதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே நான்கு வழி சாலை சந்திப்பு பகுதி, உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் அருகே மற்றும் ஆசனூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் தேங்கி நின்றது. இதனால் நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து ஒன்றன் பின் ஒன்றாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை