மேலும் செய்திகள்
கோட்டக்குப்பம் கடலில் மூழ்கி ஒருவர் பலி
15-Feb-2025
கோட்டக்குப்பம் : திருமணமான மூன்று மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சங்கராபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி முத்தரசி,23; இவர்களுக்கு கடந்தாண்டு நவம்பர் 23ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப்பின், முத்தரசி, கணவருடன் கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடி, சுனாமி குடியிருப்பில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் லட்சுமணன் வௌிநாடு செல்ல ஏற்பாடு செய்தார். அதனை முத்தரசி விரும்பவில்லை. இருப்பினும், லட்சுமணன், பாஸ்போர்ட் விஷயமாக மும்பை சென்றார். அதனால் மனமுடைந்த முத்தரசி நேற்று மாலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து முத்தரசியின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.
15-Feb-2025