உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு

எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு

ரிஷிவந்தியம் : பாசாரில் கணவருக்கு திதி கொடுக்காததால் மனவேதனையில் எலிபேஸ்ட் சாப்பிட்ட மனைவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வள்ளி, 57; இவர், இறந்த கணவர் ஏழுமலைக்கு திதி கொடுக்க வேண்டும் என மகன் ராஜாவிடம் கூறியுள்ளார்.மனைவி கர்ப்பமாக இருப்பதால் தந்தைக்கு திதி கொடுக்க இயலாது என ராஜா தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த வள்ளி கடந்த 26ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.இது குறித்து 28ம் தேதி தகவலறிந்த ராஜா, தாய் வள்ளியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வள்ளி இறந்தார். புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை