மேலும் செய்திகள்
மதுரையில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
08-Mar-2025
திருக்கோவிலூர்; காணை வி.இ.டி., கல்வியியல் கல்லுாரியில் மகளிர் தின விழா நடந்தது. கல்விக் குழும தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தான லட்சுமி, நிர்வாக இயக்குனர் கார்த்தியராஜ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி தலைவர் செல்வராஜ் குத்துவிளக்கேற்றி, விழாவை துவக்கி வைத்து, சமூக வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு குறித்து பேசினார்.பெண்களை சிறப்பிக்கும் வகையில், ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிர்வாக இயக்குனர் கார்த்தியராஜ் கலை நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். பேராசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
08-Mar-2025