மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
18-Aug-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சிறுமியிடம் பாலியல் ரீதியாக சைகை காட்டிய வாலிபரை போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று காலை பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது, விளாந்தாங்கல் ரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சபரி, 21; என்பவர் சிறுமியை தடுத்து பாலியல் ரீதியாக சைகை காட்டியுள்ளார்.இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, சபரியை கைது செய்தனர்.
18-Aug-2024