மேலும் செய்திகள்
கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
13-Mar-2025
சங்கராபுரம்; சங்கராபுரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டார். சங்கராபுரம், பங்களா தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன் மகன் வல்லரசு 25. இவரை, கடந்த பிப்.,13 ம் தேதி போலீசார் வன்கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வல்லரசுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் நேற்று உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல், சிறையில் உள்ள வல்லரசுவிடம் வழங்கப்பட்டது.
13-Mar-2025