உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலம் ஜமாபந்தியில் 1390 மனுக்கள்

சின்னசேலம் ஜமாபந்தியில் 1390 மனுக்கள்

சின்னசேலம்: சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியின் 6ம் நாளில் 1390 மனுக்கள் பெறப்பட்டன.கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில், தாசில்தார் பாலகுரு முன்னிலை யில் நேற்று நடந்த 6ம் நாள் ஜமாபந்தியில் பாண்டியன்குப்பம், பூண்டி, மூங்கில்பாடி, அம்மையாகரம், சின்னசேலம் வடக்கு, தெற்கு உள்ளிட்ட கிராம மக்கள் மனுக்கள் வழங்கினர்.முகாமில் பூண்டியைச் சேர்ந்த செங்கோடன் தந்தை சின்னான் என்பவருக்கு நிலப்பட்டாவை ஆர்.டி.ஓ., வழங்கினர். நேற்று மொத்தம் 1390 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி