உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  காகபுஜண்டர் பீடத்தில் 108 சங்காபிஷேக விழா

 காகபுஜண்டர் பீடத்தில் 108 சங்காபிஷேக விழா

சின்னசேலம்: தென்பொன்பரப்பி காகபுஜண்டர் சித்தர் பீடத்தில் 108 சங்காபிஷேக விழா நடந்தது. சின்னசேலம் அடுத்த பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் காகபுஜண்டர் ஜீவ சமாதி உள்ளது. இந்த சித்தர் பீடத்தில் கார்த்திகை மாத 5வது சோமவார விழாவையொட்டி 108 சங்காபிஷேக விழா மற்றும் 108 மூலிகை யாகம் நேற்று முன்தினம் நடந்தது. இமய மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தத்தை நிரப்பி யாகம் வளர்த்து, மகாபூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து சொர்ணபுரீஸ்வரர் மூலவர் சுவாமிக்கு 36 விதமான திரவிய மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்து, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டது. வைபவங்களை கார்த்திகேய சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ