உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாதாந்திர உதவித்தொகை பெற 112 மாற்றுத்திறனாளிகள் தேர்வு

மாதாந்திர உதவித்தொகை பெற 112 மாற்றுத்திறனாளிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்த 112 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கலெக்டர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் 18 வயதிற்குக் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தினை தேர்வுக்குழுத் தலைவரான கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவக் குழுவினர், உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் அந்த மனுக்களின் மீதான விசாரணை மேற்கொண்டனர். தொாடர்ந்து உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 112 மாற்றுத்திறனாளிகள் மருத்துவக் குழுவின் மூலம் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் மாதம் ரூ.1,500- உதவித்தொகை வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு மடக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டது. அரசின் நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பெற்று பயன் பெற கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, டாக்டர் உஷாநந்தினி உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ