உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருகத்தில் 12.5 செ.மீ., மழை

தியாகதுருகத்தில் 12.5 செ.மீ., மழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 75.02 மி.மீ., அளவு மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று முன்தினம் காலையில் இருந்து இரவு வரை பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. அதன்படி, மாவட்டத்தில் பெய்த மழை மி.மீ., அளவில்; கள்ளக்குறிச்சி 68 மி.மீ., தியாகதுருகம் 125, விருகாவூர் 70, கச்சிராயபாளையம் 41, கோமுகி அணை 53, மூரார்பாளையம் 81.50, வடசிறுவள்ளூர் 85, கடுவனுார் 100, மூங்கில்துறைப்பட்டு 66, அரியலுார் 81, சூளாங்குறிச்சி 95, ரிஷிவந்தியம் 68, கீழ்பாடி 74, கலையநல்லுார் 99, மணலுார்பேட்டை 85, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 66, வாணாபுரம் 82, மாடாம்பூண்டி 70, திருக்கோவிலுார் (வடக்கு) 68, திருப்பாலபந்தல் 63, வேங்கூர் 72, பிள்ளையார்குப்பம் 38, எறையூர் 72, உ.கீரனுார் 78 என மாவட்டம் முழுவதும் 1800.50 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக 75.02 மி.மீ., அளவு மழை பதிவானது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தியாகதுருகத்தில் 125 மி.மீ., மழை பெய்துள்ளது. தொடர் மழையால் அணை, ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !