உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு தரப்பினர் மோதல் 13 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 13 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அருகே இரு தரப்பினர் மோதலில் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்த டி.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் கார்த்தி, 38;இவர், நேற்று முன்தினம் தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மெடிக்கல் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், 60; என்பவரிடம், ஓரமாக நிற்கும்படி கூறியுள்ளார். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த, அங்கிருந்த வேலாயுதம் தரப்பினர், கார்த்தியை சரமாரியாக தாக்கினர். இது குறித்து, கார்த்தி அளித்த புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், வேலாயுதம், 60; மெடிக்கல் அருகே நின்று, செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, கார்த்தி, பன்னீர் மற்றும் சிலர் வந்து திட்டி தாக்கியதாக, அவரது மருமகன் ஏழுமலை, 39; போலீசில் புகார் அளித்துள்ளார். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், 13 பேர் மீது, அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை