உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் 16,965 விண்ணப்பங்கள்

வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் 16,965 விண்ணப்பங்கள்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக நடந்த வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் 16 ஆயிரத்து 965 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி (தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார் பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளும், 1,275 ஓட்டுச்சாவடி மையங்களும் உள்ளன. இதில், 637 மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் நடந்தது.வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு முகாம் நடத்தப்பட்டது.இதில், 18 வயது பூர்த்தியடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக சேர்த்துக்கொள்ள படிவம் 6, இறந்தவர்களின் பெயரை நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8 பெற்று, அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, கடந்த 16ம் தேதி நடந்த முகாமில் 7,141 மனுக்களும், 17ம் தேதி நடந்த முகாமில் 9,824 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது.மாவட்டம் முழுதும் மொத்தமாக புதிதாக பெயர் சேர்த்தல் தொடர்பாக 13 ஆயிரத்து 595, பெயர் நீக்குதல் தொடர்பாக 785, திருத்தம் செய்வது தொடர்பாக 2,585 என மொத்தமாக 16 ஆயிரத்து 965 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை