உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது

வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது

ரிஷிவந்தியம் : அரியலுாரில், தொழில் பிரச்னையில் வாலிபரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். வாணாபுரம் அடுத்த கடுவனுாரை சேர்ந்தவர் ராமசாமி மகன் வல்லரசு,26; இவரும், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் அஜித்குமார்,29; என்பவரும் கடந்த 2 மாதத்திற்கு முன் அரியலுாரில் வாடகை இடத்தில், கோழிப்பண்ணை வைத்தனர். கடந்த ஏப்., 30ம் தேதி அஜித்குமார், கோழி குறைவாக உள்ளதாகக்கூறி, வல்லரசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எழுந்த பிரச்னையில், அவரது தரப்பினர் சிலர், வல்லரசுவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில், பகண்டை கூட்ரோடு போலீசார், அஜித்குமாரின் சகோதரர் வெற்றிச்செல்வன், 23; மற்றும் அவரது நண்பர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ், 22; ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை