மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
01-Apr-2025
கள்ளக்குறிச்சி, ; வரஞ்சரம் பகுதியில், வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முடியனுார் பஸ்நிறுத்தம் அருகே, அதே கிராமத்தை சேர்ந்த செந்தில், 42; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. இதையடுத்து, செந்திலை கைது செய்து அவரிடமிருந்த 3 மதுபாட்டில்கள் மற்றும் ஸ்கூட்டியை பறிமுதல் செய்தனர்.அதேபோல், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ரோந்து பணியின் போது, வாணவரெட்டியில் வீட்டின் அருகே மதுபாட்டில் விற்ற கிருஷ்ணமூர்த்தி, 55; என்பவரை கைது செய்து, 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
01-Apr-2025