மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது 160 கிராம் பறிமுதல்
09-Jun-2025
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலையம்மன் கோவில் பின்புறத்தில் சந்தேகிக்கும் படி நின்றிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள், தியாகதுருகத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் ருத்தீஸ்,27; கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தை சேர்ந்த ெஹன்றி தாமஸ் மகன் பென்னிதாமஸ், 20; என தெரிய வந்தது. மேலும், இருவரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சா, கார் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் ருத்தீஷ் மீது, 3 கஞ்சா வழக்குகளும், பொது சொத்தை சேதப்படுத்தியாக ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
09-Jun-2025