உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகே மதுபாட்டில் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வடக்கனந்தல், கரடிசித்தூர் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.அப்போது வீட்டின் பின்புறமாக மது பாட்டில் விற்பனை செய்த வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த அஞ்சாபுளி மகன் அருள் 43; என்பவரை கைது செய்தனர். இதேபோல, கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் ஆனந்தராஜ் 35; என்பவரையும் கைது செய்தனர். இந்த இருவரிடமிருந்து, 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ