மேலும் செய்திகள்
மொபட்டில் மதுபாட்டில் கடத்தியவர் கைது
26-Sep-2025
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டில் மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் அரும்பராம்பட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் மதுபாட்டில் கடத்தி வந்த குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனி, 52, என்பவரை கைது செய்து 29 மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் வாகன சோதனையில் பைக்கில் மது பாட்டில் கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம், சதாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், 50; என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
26-Sep-2025